சிவகார்த்திகேயனின் “பராசக்தி” டிரெய்லர் வெளியானது

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி பராசக்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் பராசக்தி படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

பராசக்தி படத்தில் 60-களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்டகார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் வள்ளுவர் கோட்டத்தில் உயிர்ப்பித்தனர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இது கண்காட்சியாக உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், பராசக்தி படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com