சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு

சுதா கொங்கரா இயக்கும் 'எஸ்கே 25' படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராக உள்ளது.
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' (எஸ்கே 25) எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியேர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த மாதம் இறுதியில் 'எஸ்கே 25' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளன்று இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com