சிவகார்த்திகேயன் மகனுக்கு சொந்த ஊரில் நடந்த காதணி விழா

நடிகர் சிவகார்த்திகேயனின் இளைய மகன் பவனுக்கு காதணி விழா நடைபெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் மகனுக்கு சொந்த ஊரில் நடந்த காதணி விழா
Published on

திருவாரூர்,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். 'மெரினா' படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகன் என்கிற நிலைக்கு உயர்ந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வரும் முன்னரே ஆர்த்தி என்ற தனது மாமா மகளை திருமணம் செய்திருந்தார். இந்தத் தம்பதிக்கு ஆராதனா என்கிற மகளும் குகன் மற்றும் பவன் என்கிற இரு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இளைய மகன் பவனுக்கு காதணி விழா நடத்தியுள்ளார். இந்த விழா திருவாரூரில் அமைந்துள்ள சிவகார்த்திகேயனின் பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் நடந்தது. அதனை தொடர்ந்து அந்த கிராம மக்கள் சிவகார்த்திகேயனுடன் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com