ரீ-ரிலீஸாகும் சூர்யாவின் “அஞ்சான்” படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சிவகுமார்

சூர்யாவின் ‘அஞ்சான்’ படம் வருகிற 28ந் தேதி ரீ-ரிலீஸாகிறது.
ரீ-ரிலீஸாகும் சூர்யாவின் “அஞ்சான்” படத்திற்கு ரிவ்யூ கொடுத்த சிவகுமார்
Published on

சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2014- ம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கமர்ஷியல் படமாக வெளிவந்த அஞ்சான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆன நிலையில் படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஞ்சான் படத்தை ரீ-எடிட் செய்து வருகிற 28ந் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ரீ எடிட் செய்யப்பட்ட இப்படத்தின் பிரிவ்யூ சமீபத்தில் நடைபெற்றது. அந்த பிரிவ்யூ ஷோவில் சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவகுமார் கலந்துகொண்டார். அவருடன் இயக்குனர் சரணும் பிரிவ்யூ ஷோவில் கலந்துகொண்டு அஞ்சான் படத்தின் ரீ எடிட் வெர்ஷனை பார்த்திருக்கின்றனர். படத்தின் ரீ எடிட் வெர்ஷனை பார்த்த சிவகுமாருக்கு படம் ரொம்பவே பிடித்துவிட்டதாம். படம் முடிந்த பிறகு சிவகுமார் லிங்குசாமியிடம், கண்டிப்பா இந்த முறை மிஸ்ஸாவது, ரீ எடிட் வெர்ஷனை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என மனதார பாராட்டியதாக தகவல் கிடைத்திருக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com