அறுவை சிகிச்சைக்கு பிறகு....மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லும் சிவராஜ்குமார்


Sivarajkumar to return to shooting
x
தினத்தந்தி 2 March 2025 11:34 AM IST (Updated: 2 March 2025 11:37 AM IST)
t-max-icont-min-icon

ராம்சரணின் 16 வது படத்தில் சிவராஜ் குமார் நடிக்க உள்ளார்.

பெங்களூரு,

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார். இவர் 1974ல் வெளியான 'ஸ்ரீனிவாச கல்யாண' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தற்போதுவரை 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் 'ஜெயிலர்' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டநிலையில், சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். தற்போது குணமடைந்திருக்கும் இவர் மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார்.

அதன்படி, ராம்சரணின் 16 வது படத்தில் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார். இந்த வாரத்தில் இருந்து ஐதராபாத்தில் நடைபெறும் இப்படப்பிடிப்பில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிரது. பான்-இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் ஜெகபதி பாபு, ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

1 More update

Next Story