சிவராஜ்குமார் நடிக்கும் “ஒரிஜினல் மான்ஸ்டர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

சந்துரு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’.
சிவராஜ்குமார் நடிக்கும் “ஒரிஜினல் மான்ஸ்டர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
Published on

சிவராஜ்குமாரின் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அறிவிப்பு விழா மும்பையில் நடந்தது.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ ராஜ்குமார் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை சந்துரு இயக்குகிறார். ‘கப்ஜா’ படத்திற்கு பிறகு ஆர்.சந்துருவுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் சிவராஜ்குமார். படத்துக்கு அஜனீஷ் லோகேஷ் இசையமைக்கிறார்.

பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யமுனா சந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஆனந்த் பண்டிட் வழங்குகிறார்.

இந்நிலையில், ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் அறிவிப்பு விழா மும்பையில் நடந்தது.

சிவ ராஜ்குமார் கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் துவி சக்கர வாகனத்தில் பயணிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் எதிரிகளை கொன்று குவித்து ரத்தம் கோய்ந்த ஆயுதத்துடன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் செகண்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது

இந்த விழாவில் படம் குறித்து இயக்குநர் சந்துரு பேசும்போது “நான் ‘கப்ஜா’ படத்தை உருவாக்கியபோது, இந்தியா முழுவதும் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்பதை உணர்ந்தேன். ஆனால் அதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது, அதை நட்சத்திரங்களால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். அந்த சிந்தனைதான் இந்தத் திரைப்படத்தின் நடிகர்கள் தேர்வை தீர்மானித்துள்ளது. ஒரு கன்னட படத்தை மற்ற மொழிகளில் வெறும் டப்பிங் செய்வதோடு நிறுத்தாமல், வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களை வைத்து அந்தந்த மாநில ரசிகர்களிடமும் படத்தை கொண்டு சேர்க்க விரும்புகிறோம். சிவராஜ்குமாரை மனதில் வைத்துதான் இந்தக் கதையை எழுதினேன். அவர் உலகளாவிய ஹீரோ. தமிழ், மலையாளம் உள்பட மற்ற மொழி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com