நானி, ஸ்ரீநிதி ஷெட்டியை சந்தித்த எஸ்.ஜே. சூர்யா - வைரலாகும் வீடியோ

கடைசியாக நானி, எஸ்.ஜே. சூர்யா நடித்த ’சூர்யாவின் சனிக்கிழமை’ ஹிட்டானநிலையில், இந்த சந்திப்பு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
மும்பை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. சூர்யாவின் சனிக்கிழமை படத்தையடுத்து சைலேஷ் கொலானு இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் ஹிட் 3.
இதில் நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது அதற்கான புரமோசனில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
அதன்படி, மும்பையில் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி புரமோசனில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை நடிகர் எஸ்.ஜே.சூர்யா சந்தித்தார். நானியை கட்டிப்பிடித்து தனது அன்பை பகிர்ந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. கடைசியாக இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஹிட்டானநிலையில், இந்த சந்திப்பு பேன்ஸை மகிழ்வித்துள்ளது.
Related Tags :
Next Story






