எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'பொம்மை' படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு

‘பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'பொம்மை' படத்தின் 2-வது டிரைலர் வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த டிரைலர் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. இந்த படம் வரும் 16-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy to release the second trailer of #Bommai https://t.co/lqdNyoXWSc Congrats to @Radhamohan_Dir Saar, young Maestro @thisisysr thambi , my favorite @iam_SJSuryah saar & team! Do watch #Bommai on June 16th in theatres!

venkat prabhu (@vp_offl) June 4, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com