எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'பொம்மை' படத்தின் டிரைலர் வெளியானது..!

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'பொம்மை' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் 'பொம்மை' படத்தின் டிரைலர் வெளியானது..!
Published on

சென்னை,

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரொமான்ஸ் திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படமாக பொம்மை படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் பொம்மை திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com