'எஸ்கே 23' திரைப்படத்தின் டீசர் அப்டேட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே 23’ திரைப்படத்தின் பெயர் டீசர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'எஸ்கே 23' திரைப்படத்தின் டீசர் அப்டேட்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், 'அமரன்' படத்தை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' (எஸ்கே 25) எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிறார். மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. 90 சதவீதம் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே 23' திரைப்படத்தின் பெயர் டீசர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com