வலைத்தளத்தில் அவதூறு... செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்த நடிகை

வலைத்தளத்தில் அவதூறு பதிவால் கோபமடைந்த நடிகை அனுசுயா.செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்த விடுத்தார்.
வலைத்தளத்தில் அவதூறு... செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்த நடிகை
Published on

பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ராம் சரண், சமந்தாவுடன் ரங்கஸ்தலம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அனுசுயா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்க்கை அவரோடு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதை பார்த்த ஒருவர். அப்படியெல்லாம் இல்லை அவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்ற பதிவை பகிர்ந்தார்.

அதை பார்த்த அனுசுயாவுக்கு கோபம் வந்தது. அவதூறுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "அது என்னடா தம்பி அப்படி சொல்லி விட்டாய். அவரிடம் எவ்வளவு இருக்கிறது? என்னிடம் பணம் இல்லையா? கன்னத்தில் போட்டுக்கொள். இல்லாவிட்டால் செருப்பால் உன் கன்னத்தில் அடிப்பேன்'' என்றார்.

இதற்கு பதில் அளித்த நபர், "உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு சொன்னாலும் உண்மை உண்மைதான்''. என்றார். இதற்கு அனுசுயா, "எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே. உனக்கு என்ன தெரியும். மஞ்சள் காமாலை வந்தவன் கண்ணுக்கு உலகம் எல்லாம் மஞ்சளாகவே தெரியுமாம். உன் புத்தி பணத்தில் இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்காது. முடிந்தால் நல்லவனாக மாறு'' என்று பதில் அளித்துள்ளார். இந்த மோதல் வலைத்தளத்தில் பரபரப்பானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com