

சென்னை,
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடம் வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், சங்கத்திற்காக நிதி திரட்ட மலேசியாவில் நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
“சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி தேவைப்படுகிறது. எனவே தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு இடம் வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம், சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு கலை நிகழ்ச்சி நடத்த உள்ளோம். அந்த நிகழ்ச்சியை மலேசியாவில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் நடிகர் சிம்பு கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு எப்போதும் நான் பக்கபலமாக இருப்பேன் என்று அவர் கூறியுள்ளார். நடிகர் சிம்புவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.