'தி கோட்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு

'தி கோட்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
'தி கோட்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டீஏஜின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

இந்தநிலையில், பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், படத்தின் ஸ்னீக் பீக் வீடியோயை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com