மகள்களின் புகைப்படங்களை வெளியிட்ட பாடலாசிரியர் சினேகன்

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் தனது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் முதல்முறையாகப் பகிர்ந்துள்ளார்.
மகள்களின் புகைப்படங்களை வெளியிட்ட பாடலாசிரியர் சினேகன்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள அவர், 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ் சீசன் 1' நிகழ்ச்சியில் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் கவிதை மற்றும் காதல் என பெயர் சூட்டினார்.

இந்நிலையில் முதன்முறையாக சினேகன் - கன்னிகா தம்பதி, அவர்களது மகள்களின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அறிமுகபடுத்தியுள்ளனர். அவரின் பதிவில் "எங்கள் அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கும், திரையுலக உறவுகளுக்கும். வணக்கம்.. எங்கள் இரட்டை மகள்கள் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் இருவரையும் உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு.. எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் .. நன்றி என்றும் நட்புடன் .. சினேகன்- கன்னிகா " என குறிப்பிட்டுள்ளார்.ரசிகர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com