தந்தை பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா

தந்தையின் பிறந்தநாளை குழந்தைகளுடன் நடிகை சினேகா கொண்டாடினார்.
தந்தை பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சினேகா
Published on

தமிழ் சினிமாவில் 'புன்னகை இளவரசி'யாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சினேகா. முன்னணி கதாநாயகியாக இருந்தபோதே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். 

2 குழந்தைகளுக்கு தாயான பின் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். படங்களை தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய தந்தை ராஜாராமுக்கு சமீபத்தில் 70-வது பிறந்தநாள் வந்தது. தந்தையின் பிறந்தநாளில் அவர் எதிர்பாராத விதமாக, 'சர்ப்ரைஸ்' தர வேண்டும் என சினேகா விரும்பினார். சென்னை செங்குன்றத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அப்பாவை அழைத்து சென்றார்.

அங்கிருந்த குழந்தைகளுடன் சினேகா தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடினார். குழந்தைகளின் வாழ்த்துகளுடன் ராஜாராம் 'கேக்' வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினார்.

தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹான், மகள் ஆத்யந்தா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள். குழந்தைகள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு உணவு பரிமாறியதுடன், புத்தகங்களும் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com