2 நாட்களில் இத்தனை கோடியா?.. குட் பேட் அக்லி படத்தின் வசூல் விவரம்

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'குட் பேட் அக்லி' வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
2 நாட்களில் இத்தனை கோடியா?.. குட் பேட் அக்லி படத்தின் வசூல் விவரம்
Published on

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 10-ந் தேதி உலகம் முழுவதும் 'குட் பேட் அக்லி' படம் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,000-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி முதல் நாளில் மட்டுமே ரூ. 30.9 கோடி வசூலித்தது.

இந்த நிலையில், இப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் நாட்கள் வாரவிடுமுறை தினங்கள் என்பதால் படத்தின் வசூல் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com