பிரபல நடிகை குளித்த நீரால் உருவான சோப்பு...போட்டிபோட்டு வாங்கிய ரசிகர்கள்


Soap made from famous actress bath water...fans compete to buy it
x

விற்பனைக்கு வந்த முதல் 5 நிமிடத்திலேயே 5 ஆயிரம் சோப்புகளும் விற்பனையாகி இருக்கிறது.

சென்னை,

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, தான் குளித்த நீரை கொண்டு உருவாக்கப்பட்ட சோப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பைன் மரப்பட்டையின் பிசின் உள்பட சில பொருள்களுடனான கலவையுடன் சிட்னி ஸ்வீனி குளிக்கும்போது உடலில் பட்டு வெளியேறும் நீரை சேர்த்து உருவாக்கப்பட்ட புதிய சோப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

141 கிராம் எடை கொண்ட இந்த சோப்பின் விலை 8 டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.650 ஆகும். முதற்கட்டமாக ஆன்லைனில் விற்பனைக்கு வந்த 5 ஆயிரம் சோப்புகளும் முதல் 5 நிமிடத்திலேயே விற்பனையாகி இருக்கிறது.

சிட்னி ஸ்வீனியின் வாசனையை நுகர விரும்பிய சிலர் அந்த சோப்பை போட்டிபோட்டு வாங்கியிருக்கிறார்கள். அடுத்தகட்டமாக 5 ஆயிரம் சோப்புகள் விரைவில் வருகிறதாம்.

1 More update

Next Story