திரையுலகிற்கு வந்தபோது எனக்கு ஆதரவளிக்க யாருமே இல்லை - சோபிதா துலிபாலா

திரையுலகம் ஒரு சர்க்கஸ் போன்றது என்று நடிகை சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.
சோபிதா துலிபாலா
சோபிதா துலிபாலா
Published on: 

திரையுலகிற்கு வந்தபோது எனக்கு ஆதரவளிக்க யாருமே இல்லை என்று நடிகை சோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியிருப்பவர் நடிகை சோபிதா துலிபாலா. கடந்த 2024-ம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சோபிதா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் கால்பதித்த ஆரம்ப நாட்களில் பல்வேறு சவால்களையும், மனரீதியான போராட்டங்களையும் சோபிதா எதிர்கொண்டுள்ளார். அந்த அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ள அவர் கூறியதாவது:-

ஆதரவளிக்க யாருமே இல்லை

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் நடிகைகளின் அட்டைப்படங்களைப் பார்ப்பேன். அப்போது என்னைப் போன்ற ஒரு சாதாரணப் பெண்ணால் அந்த நிலையை அடைய முடியுமா என்று நினைத்திருக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்தபோது எனக்கு ஆதரவளிக்க யாருமே இல்லை. என்ன செய்ய வேண்டும்? எப்படி முன்னேற வேண்டும்? என்று அறிவுரை கூறவோ, வழிகாட்டவோ ஒருவர் கூட இல்லை.

கற்றுக்கொண்டேன்

அந்தக் காலகட்டம் என் வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான அனுபவமாக இருந்தது. பல ஆடிஷன்களில் பங்கேற்ற பிறகுதான் எனக்கு முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றபோது பல சிறந்த மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மனதை ஒருமுகப்படுத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

திரையுலகம் ஒரு சர்க்கஸ்

திரையுலகம் ஒரு சர்க்கஸ் போன்றது. இங்கே நம்முடைய திறமைக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அதன் பிறகுதான் எனக்குள் இருந்த பயம் கொஞ்சம், கொஞ்சமாக நீங்கியது. ஆனால், இந்த நிலையை அடைவதற்கு மிகுந்த தைரியமும், கடின உழைப்பும், பொறுமையும், காலமும் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

X