காதலில் சோபிதா துலிபாலா

காதலில் சோபிதா துலிபாலா
Published on

தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலா தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவருக்கும் சமந்தாவின் முன்னாள் கணவரும். தெலுங்கு நடிகருமான நாகசைதன்யாவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வருகின்றன.

இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சோபிதா துலிபாலா தான் நடித்துள்ள வெப் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது, நாக சைதன்யா பற்றி உங்கள் கருத்து என்ன? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து சோபிதா துலிபாலா கூறும்போது, "நாகசைதன்யா மிகவும் மரியாதைக்குரிய மனிதர். கவுரவமாக நடந்து கொள்வார். எப்போதும் அமைதியாக சகஜமாக இருப்பார். நாக சைதன்யாவிடம் இருக்கும் இந்த குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்றார்.

இதன்மூலம் நாகசைதன்யாவை சோபிதா துலிபாலா காதலிப்பதாக மீண்டும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com