இவன் ரஜினி படம் பண்றானானு சிலருக்கு பதற்றம் - இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.
இவன் ரஜினி படம் பண்றானானு சிலருக்கு பதற்றம் -  இயக்குநர் சிபி சக்ரவர்த்தி
Published on

ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இப்படம் 2027 பொங்கலுக்கு படம் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில், ‘வித் லவ்’ திரைப்பட நிகழ்வில் பேசிய இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “‘தலைவர் 173’ திரைப்படத்தை நான்தான் இயக்குகிறேன் என்றதும் பலருக்கும் இவனா என்கிற பதட்டம் உண்டாகியுள்ளது. ஆனால், கண்டிப்பாக இப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது நிறைவுடன் வருவீர்கள்” என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com