பெண் தலைமை பொறுப்பில் இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஸ்வேதா மேனன்

செயற்குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் திட்டமிட்டு என்னை குறிவைத்து தனிமைப்படுத்த முயல்கிறார்கள் என ஸ்வேதா மேனன் குற்றம் சாட்டியுள்ளார்.
பெண் தலைமை பொறுப்பில் இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஸ்வேதா மேனன்
Published on

திருவனந்தபுரம்,

கேரள நடிகர் சங்கத்திற்கு ((AMMA) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் முதல் பெண் தலைவர் என்ற அந்தஸ்தையும் பெற்றார். இந்த நிலையில், நடிகர் சங்க பொறுப்பில் பெண் இருப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஸ்வேதா மேனன் பரபரப்பு குற்றசசாட்டு முன்வைத்துள்ளார். இது குறித்து ஸ்வேதா மேனன் கூறியிருப்பதாவது: சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் என்னை பதவியிலிருந்து விலகக் கூறினால், நான் எனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.

ஆனால், நான் இங்கு தோற்பதற்காக வரவில்லை. செயற்குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் திட்டமிட்டு என்னை குறிவைத்து தனிமைப்படுத்த முயல்கிறார்கள். இந்த அமைப்பில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருப்பதை ஏற்றுக்கொள்ள சிலர் இன்னும் தயங்குகிறார்கள். அன்சிபா மற்றும் டினி டாம் இடையேயான சர்ச்சை விவகாரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது போல் தெரிகிறது. ஊடகச் செய்திகள் மூலமாகவே எனக்கு இதுகுறித்த புகார் முதலில் தெரியவந்தது. அன்றைய தினம் மதியம் 2 மணியளவில்தான் அம்மா' சங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் புகார் வந்தது. இது குறித்துப் பேச அன்சிபாவைத் தொடர்பு கொள்ள முயன்றோம், ஆனால் அவர் எங்கள் அழைப்பை ஏற்கவில்லை சங்கத்தின் விதிமுறைகளின்படி இந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்படும்” என்று ஸ்வேதா மேனன் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com