சில நேரங்களில் சில மனிதர்கள்...! ஜெயகாந்தனின் மகள்கள் கமல்ஹாசனுக்கு கோரிக்கை

திரைப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள்கள் மற்றும் மகன் கமல்ஹாசனுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சில நேரங்களில் சில மனிதர்கள்...! ஜெயகாந்தனின் மகள்கள் கமல்ஹாசனுக்கு கோரிக்கை
Published on

சென்னை ,

இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கி உள்ள 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தின் இசை நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பை மாற்றக்கோரி மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகள்கள் மற்றும் மகன் கமல்ஹாசனுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், தமிழ் இலக்கிய உலகில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ஒரு மைல்கல் எனவும் ஜெயகாந்தனையும் அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்கள் இத்தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும், டிஜிட்டல் சுவடுகளால் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படைப்பு அழிக்கப்படக்கூடாது என்பதால் தாங்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

"சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புத்தகம் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளுள் தலை சிறந்த ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com