மிருணாள் தாகூரின் ''சன் ஆப் சர்தார் 2''...திரிப்தி டிம்ரியின் ''தடக் 2'' - முதல் நாள் வசூலில் முந்தியது யார்?


Son of Sardaar 2 vs Dhadak 2 box office Day 1: Ajay Devgns film earns twice
x

'சன் ஆப் சர்தார் 2' படம் முதல் நாள் வசூலில் ''தடக் 2'' படத்தை விட இரு மடங்கு அதிகமாக வசூலித்திருக்கிறது.

சென்னை,

'சன் ஆப் சர்தார் 2' மற்றும் 'தடக் 2' ஆகிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

அஜய் தேவ்கன், மிருணாள் தாகூரின் 'சன் ஆப் சர்தார் 2' குடும்ப பொழுதுபோக்கு படமாகவும், சித்தாந்த் சதுர்வேதி மற்றும் திரிப்தி டிம்ரியின் 'தடக் 2' காதல் படமாகவும் உருவாகி இருக்கிறது.

நேற்று திரையரங்குகளில் வெளியான இதில், 'சன் ஆப் சர்தார் 2' படம் முதல் நாள் வசூலில் ''தடக் 2'' படத்தை விட இரு மடங்கு அதிகமாக வசூலித்திருக்கிறது.

விஜய் குமார் அரோரா இயக்கிய 'சன் ஆப் சர்தார் 2' ரூ.6.65 கோடி வசூலித்துள்ளதாகவும், 'தடக் 2' முதல் நாளில் ரூ.3.35 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story