சோழர்களின் பெருமையை உலக கேமிங்கிற்கு கொண்டு செல்லும் “சன் ஆப் தஞ்சை”

சோழர் கால தமிழ் நிலத்தை மையப்படுத்தி ‘சன் ஆப் தஞ்சை’ வீடியோ கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
சோழர்களின் பெருமையை உலக கேமிங்கிற்கு கொண்டு செல்லும் “சன் ஆப் தஞ்சை”
Published on

‘சன் ஆப் தஞ்சை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ கேமுக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை பாடலாசிரியரும் மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

சென்னை அயலெட் ஸ்டூடியோஸால் உருவாக்கப்பட்ட ‘சன் ஆப் தஞ்சை’ விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் எக்ஸ், பிஎஸ் 5 ஆகிய தளங்களில் வெளியாகவுள்ளது.

அரண்மனையில் வாழ்ந்துவரும் சோழ இளவரசன் விண்ணேந்திரன் பற்றிய கதையாக இந்த வீடியோ கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. இதனால் சாதாரண மனிதனாக சமூகத்தில் மகனை களமிறக்கிவிடுகிறார் மன்னர். வணிகர்கள், உழவர்களோடு இருந்து நாட்டை ஆளும் தகுதி வளர்த்துகொண்டு இளவரசன் அரியணை ஏறி எதிர்களை வீழ்த்துவதே இந்த கேமின் களமாக அமைக்கப்பட்டுள்ளது.

சோழர் காலத்திய தஞ்சாவூர் நிலம், விவசாயம், காடுகளை காட்சிப்படுத்தும் வகையில் கிராபிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வசனங்களுடன் இந்த கேம் வெளியாகவுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தமிழ் கேம் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேமின் டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

பண்டைய தென்னிந்தியாவின் மொழி, பண்பாடு மற்றும் நிலப்பரப்பை கேமர்கள் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com