நான் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி பரவ அவர்தான் காரணம்...சோனாக்சி சின்ஹா

சமீபத்திய புகைப்படம் ஒன்றில் சோனாக்சி சின்ஹா, உடல் எடை அதிகரித்து காணப்பட்டார்.
சென்னை,
தான் கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் வதந்தி பரவ தனது கணவர்தான் காரணம் என்று நடிகை சோனாக்சி சின்ஹா கூறி உள்ளார்.
சமீபத்திய புகைப்படம் ஒன்றில் சோனாக்சி சின்ஹா, உடல் எடை அதிகரித்து காணப்பட்டதால் அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. இதை ரசிகர்களும் நம்பி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தனது கணவருடனாக வாட்ஸ் அப் உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தன்னுடைய கணவர் நேரம் காலம் பார்க்காமல் அடிக்கடி, ருசியாக சாப்பிடுவதற்கு ஏதாவது தனக்கு வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பதாகவும் இதன் காரணமாகவே உடல் எடை அதிகரித்து விட்டதாகவும் சோனாக்சி சின்ஹா விளையாட்டாக கூறியுள்ளார். தற்போது இந்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story






