ரத்தத்தில் கடிதம்...ரசிகரின் அதிர்ச்சி செயலை பகிர்ந்த 'காதலர் தினம்' பட நடிகை

நடிகை சோனாலி பெந்த்ரே, 90களில் தனது ரசிகர்கள் செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
Sonali Bendre on fan's death over failing to meet her: 'How can people place humans on such a pedestal'
Published on

சென்னை,

தமிழில் 'காதலர் தினம்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான சோனாலி பெந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து இருக்கிறார்.

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவரை சந்திக்க முடியாமல் போனதால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டாராம். இந்நிலையில், 90களில் தனது ரசிகர்கள் செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் பேசியதாவது,

ஒரு முறை போபாலை சுற்றிப்பார்க்க சென்றிருந்தேன். அப்போது என்னை சந்திக்க முடியாமல் போனதால் எனது ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சிலர் கூறினர். இது என்னை மிகவும் அதிர்ச்சியடைய செய்தது. அதேபோல், எனக்கு மெயிலில் ஒரு கடிதம் வந்தது. அதில் சிவப்பு நிறத்தாலான எழுத்துகள் இருந்தன. அது ரத்தமா? என்று சோதித்து பார்த்து ஆச்சரியப்பட்டேன். இப்படியும் செய்வார்களா? . எப்படி ஒரு மனிதனை இப்படி ஒரு இடத்தில் வைத்து பார்க்க முடிகிறது?. இதுபோன்ற ரசிகர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com