பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நடிகை நோரா பதேகி

துருவா சர்ஜா, ஷில்பா ஷெட்டி நடித்துள்ள ‘கேடி தி டெவில்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியானது.
பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நடிகை நோரா பதேகி
Published on

கன்னடத்தில் நடிகர் துருவ சார்ஜா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் ‘கேடி தி டெவில்’ பிரேம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகையான நோரா பதேகி இணைந்து நடனமாடியுள்ளார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். கடந்த மாதம் இந்தப் பாடலின் இந்தி வெர்ஷன் வெளியான போது, அதன் வரிகளில் மிகுந்த ஆபாசம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் குற்றச்சாட்டு எழுந்தது.

துருவ் சார்ஜாவின் ‘கேடி தி டெவில்’ படத்தின் ‘திற நீ எந்தன்’ பாடல் வெளியானது. இப்​படத்​திலிருந்து இந்​தி​யில் வெளி​யான குத்​துப்​பாடல் சர்ச்​சை​யில் சிக்​கியது. அப்​பாடலில் நோரா பதேஹி, சஞ்​சய் தத் ஆடி​யிருந்​தனர். இதில், ஆபாச​மான வார்த்​தைகள் இருப்​ப​தாக கடும் கண்​டனங்​கள் எழுந்​ததை அடுத்து தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் தயாரிப்பு நிறு​வனத்​துக்கு நோட்​டீஸ் அனுப்​பியது. இதையடுத்து யூடியூப் தளத்​தில் இருந்து இப்​பாடல் நீக்​கப்​பட்​டது. இயக்​குநர் பிரேம், மன்​னிப்​புக்கேட்டு வீடியோ வெளி​யிட்​டார்.

இதனைத் தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து இந்தப் பாடலில் நடித்திருந்த சஞ்சய் தத் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியிருந்தது. கடந்த வாரம் சஞ்சய் தத் மகளிர் ஆணையம் முன்பாக ஆஜராகி, இந்தப் பாடல் படமாக்கப்பட்டபோது வேறு மொழியில் இருந்ததால் எனக்கு அந்த வரிகளின் அர்த்தம் தெரியாது என்றும், இருந்தாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். மேலும் இதற்குப் பிராயச்சித்தமாக பழங்குடியின குழந்தைகள் 50 பேருக்கு கல்வி நிதி அளிப்பதாகவும் உறுதியளித்தார்.

தற்போது நடிகை நோரா பதேகியும் மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஒரு கலைஞராகப் பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் உறுதியளித்தார். மேலும் அவர் சஞ்சய் தத்தைப் போலவே அனாதை பெண் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com