பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தில் இருந்து பாடல் வெளியீடு

‘பஹீரா’ படத்தில் இருந்து, 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபுதேவா நடித்துள்ள 'பஹீரா' படத்தில் இருந்து பாடல் வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் 'பஹீரா'. சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி சங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். பிரபுதேவா பல வேடங்களில் நடித்துள்ள 'பஹீரா' படத்தின் டிரைலர் 2021-ம் ஆண்டு வெளியானது. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த படம் வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்ந்து இப்படத்தின் இரண்டாவது டிரைலரை சமீபத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து, 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

https://t.co/hfatvRsFdU NEW SONG OF BAGHEERA

Prabhudheva (@PDdancing) February 28, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com