விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி

விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
Published on

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்தில் புகழ் பெற்ற விஜயிடம் நடனம் ஆட பயிற்சி பெற்ற நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து தற்போது முடிந்தது. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com