விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் - படக்குழு வெளியிட்ட வீடியோ

‘மார்க் ஆண்டனி’ படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் - படக்குழு வெளியிட்ட வீடியோ
Published on

சென்னை,

'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா', 'அன்பானவன், அசராதவன், அடங்காதவன்', 'பகீரா' படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அதிருதா..' என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

G.V.Prakash Kumar (@gvprakash) July 12, 2023 ">Also Read:

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com