பிரபல நடிகரின் மனைவி கார் விபத்தில் காயம்


பிரபல நடிகரின் மனைவி கார் விபத்தில் காயம்
x

விபத்தில் படுகாயமடைந்த பிரபல நடிகரின் மனைவி உடல்நிலைக் குறித்து 72 மணிநேர கண்காணிப்புக்கு பிறகே தகவல் தெரிவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மும்பை,

நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் செய்த உதவிகள் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இந்தநிலையில், மராட்டிய மாநிலம் மும்பை நாக்பூர் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் சோனாலி சூட் ஓட்டிச் சென்ற கார் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற சோனாலி சூட்டும், அவரது உறவினரும் படுகாயமடைந்த நிலையில், சோனாலியின் தங்கை சுனிதா சிறிய காயங்களுடன் தப்பினார்.படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களின் உடல்நிலைக் குறித்து 72 மணிநேர கண்காணிப்புக்கு பிறகே தகவல் தெரிவிக்க முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தை சோனு சூட் உதவியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், சோனாலி உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தற்போது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story