சூரியின் “மண்டாடி” படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூரி நடிப்பில் உருவான ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
சூரியின் “மண்டாடி” படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம், நடிகர் சூரி காமெடி நடிகராக உயர்ந்தார். விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வேதாளம், ரஜினியின் அண்ணாத்தே, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரின் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தினார். வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தின் மூலம், கதாநாயகனான சூரி, அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களிலும் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வணிக ரீதியான வெற்றிகளைப் பதிவு செய்தன. கருடன் மற்றும் மாமன் நல்ல வசூலை ஈட்டின. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

சூரி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் பெரிய பொருள் செலவில் தயாராகிறது. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டாடி’ படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ரூ.75 கோடி செலவில் உருவாகி வரும் இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும் என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறைவு

மதிமாறன் இயக்கிவந்த ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு கடலோரப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சவாலான மேக்கிங் காட்சிகளை பகிர்ந்து அறிவித்திருந்தது.

படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

சமீபத்தில் ‘மண்டாடி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது. இப்படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘மண்டாடி’ படத்தின் பாடல் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com