ரூ. 150 கோடி வசூல் குவித்த சூரியின் “மண்டாடி”

சூரி நாயகனாக நடித்து வெளியான ‘மண்டாடி’ மக்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரூ. 150 கோடி வசூல் குவித்த சூரியின் “மண்டாடி”
Published on: 

‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சூரியின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ந் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை கதை

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது. ‘மண்டாடி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

‘மண்டாடி’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் திரைகள் அதிகரிக்கப்பட்டன.

திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததுடன் 4-வது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது.

ஓடிடி ரிலீஸ்

‘மண்டாடி’ திரைப்படம் வரும் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

திரைப்படத்தின் வசூல்

இந்த நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் 25 நாட்களில் உலகளவில் ரூ. 150 கோடியையும் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடியையும் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. சூரி நடித்த திரைப்படங்களிலேயே இப்படம் அதிகமான வசூலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com