"சொட்ட சொட்ட நனையுது" டைட்டில் டீசர் வெளியீடு

இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, கலக்கலான கமர்ஷியல் படமாக ‘சொட்ட சொட்ட நனையுது’ உருவாகியுள்ளது.
Published on

சென்னை,

அறிமுக இயக்குநர் நவீத் பரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணியும், அறிமுக நடிகை ஷாலினியும் நடிக்கின்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'கலக்கப் போவது யாரு' புகழ் ராஜா இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, கலக்கலான கமர்ஷியல் படமாக, சிரிக்க வைக்கும் ஒரு படமாக 'சொட்ட சொட்ட நனையுது' உருவாகியுள்ளது.

இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும்தான் இப்படத்தின் மையம். அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் டீசர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com