அனுமதியின்றி பண்ணை வீடு கட்டிய தெலுங்கு சினிமா காமெடி நடிகருக்கு நோட்டீஸ்

தெலுங்கு சினிமா காமெடி நடிகரான அலி 1,200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அனுமதியின்றி பண்ணை வீடு கட்டிய தெலுங்கு சினிமா காமெடி நடிகருக்கு நோட்டீஸ்
Published on

தெலுங்கு திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அலி. இவர் ஏராளமான தெலுங்கு படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவர் 1,200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழில் தோழா திரைப்படத்தில் நடித்துள்ளார். பவன் கல்யாணும், அலியும் அதிகமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர் தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள எக்மாமிடி கிராமத்தில் பண்ணை வீடு கட்டி வருகிறார். இந்த வீடு எந்தவித அனுமதி இன்றி கட்டப்படுவதாக கிராம பஞ்சாயத்து செயலாளர் சார்பில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீஸ் கட்டிட பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கட்டுமானத்திற்கான அனுமதியை பெற வேண்டும். இதனை மீறினால் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அலி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் கடந்த 2019 ம் ஆண்டு சேர்ந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்பட வில்லை.

இந்த நிலையில் அவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் அலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com