'கர்ணன்' பட நடிகைக்கு விரைவில் திருமணம்

ரஜிஷா விஜயனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
'கர்ணன்' பட நடிகைக்கு விரைவில் திருமணம்
Published on

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன். அதனை தொடர்ந்து ஜெய்பீம், சர்தார் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

ரஜிஷா விஜயன், மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக சில இடங்களில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தது.காதலை பற்றி இருவருமே மவுனம் காத்து வந்த நிலையில், ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இருவருமே சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதன்மூலம் இருவருமே தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர்.

விரைவில் திருமண தேதி வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ரஜிஷா விஜயனுக்கும், டோபின் தாமசுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com