இந்தோ-அமெரிக்க படத்தில் கதாநாயகி...பிரியாமணியின் புதிய மைல்கல்

நடிகை பிரியாமணி சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தோ-அமெரிக்க படத்தில் கதாநாயகி...பிரியாமணியின் புதிய மைல்கல்
Published on

மும்பை,

தென்னிந்திய திரைப்படங்களிலும், ‘தி பேமிலி மேன்’ உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்து நாடு முழுவதும் கவனம் பெற்ற நடிகை பிரியாமணி தற்போது சர்வதேச திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தோ-அமெரிக்க படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் பிரியாமணியுடன் பாலிவுட் நடிகர் மோஹித் ரெய்னா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஹர்ஷ் மகாதேஷ்வர் இயக்குகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ரெட் பைசன் புரொடக்சன்ஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த அசூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

Also Read
“எனக்கு ஏதாவது ஆனால் அவர்கள்தான் காரணம்”- கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை
இந்தோ-அமெரிக்க படத்தில் கதாநாயகி...பிரியாமணியின் புதிய மைல்கல்

இந்த திரைப்படம், இந்திய மற்றும் அமெரிக்க கலாசாரங்களை இணைக்கும் குடிபெயர்ந்த குடும்பத்தின் உணர்ச்சிபூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. சர்வதேச மேடையில் புதிய சாதனை படைக்கவுள்ள பிரியாமணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com