ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படத்தை இயக்கும் தென்னிந்திய நடிகர்?

ஹோம்பலே பிலிம்ஸ், ஹிருத்திக் ரோஷனுடன் தனது அடுத்த படத்தை அறிவித்தது.
சென்னை,
பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹிருத்திக் ரோஷனும் இணைந்திருக்கிறார்.
சமீபத்தில், கே.ஜி.எப் மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் ஹிருத்திக் ரோஷனுடன் தனது அடுத்த படத்தை அறிவித்தது. ஆனால் இயக்குனரின் பெயரை வெளியிடவில்லை.
இந்நிலையில், அந்த இயக்குனர் தென்னிந்திய நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் என்று இணையத்தில் தகவல் பரவி வருகிறது. பிருத்விராஜ், சலார் படத்தில் ஹோம்பலே பிலிம்ஸுடன் பணிபுரிந்தார், விரைவில் சாலார் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.
பிருத்விராஜ் இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில், வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






