ஹாலோவீன் கொண்டாட்ட நெரிசலில் தென்கொரிய நடிகர், பாடகரான லீ ஜி ஹான் உயிரிழப்பு

தென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்ட நெரிசலில் அந்நாட்டின் நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் உயிரிழந்து உள்ளார்.
ஹாலோவீன் கொண்டாட்ட நெரிசலில் தென்கொரிய நடிகர், பாடகரான லீ ஜி ஹான் உயிரிழப்பு
Published on

சியோல்,

தென் கொரியாவின் சியோல் நகரில் இதாவோன் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. கொரோனா பரவலுக்கு பின்னர் விமரிசையாக நடந்த இந்த திருவிழாவில் 1 லட்சம் பேர் வரை கூடியுள்ளனர்.

கொண்டாட்டத்தின்போது, ஒரு குறுகிய தெருவில் மக்கள் அனைவரும் கூடியதில், ஒருவர் மீது ஒருவர் தள்ளப்பட்டனர். இந்த கூட்டத்தில் சிக்கி பலர் நசுக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் தென் கொரியாவை சேர்ந்த நடிகர் மற்றும் பாடகரான லீ ஜி ஹான் என்பவரும் உயிரிழந்து உள்ளார். இதனை 935 என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிறுவனம் ஹானின் பணிகளை கையாண்டு வந்து உள்ளது. எங்களது நிறுவனத்தின் விலைமதிப்பில்லா குடும்ப உறுப்பினராக இருந்தவர் அவர். வானில் நட்சத்திரம் போல் மின்னியவர். எங்களை விட்டு சென்று விட்டார். அவரது மறைவால் துயரில் இருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

அவர் பழகுவதற்கு இனிமையானவர். அனைவருடனும் நன்றாக பழக கூடிய நண்பர். எப்போதும் புன்சிரிப்புடன் எங்களை வரவேற்க கூடிய ஜி-ஹானை நாங்கள் இனி பார்க்கவே முடியாது என்பதனை எங்களால் நம்பமுடியவில்லை என தெரிவித்து உள்ளது. அவரது இறுதி சடங்குகள் நாளை (நவம்பர் 1) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com