புதுத்தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கி உள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
புதுத்தொழில் தொடங்கிய காஜல் அகர்வால்
Published on

தமிழில் பழனி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் காஜல் அகர்வால். மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் 2020-ல் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் சினிமாவை தாண்டி தற்போது சொந்தமாக அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். கண் மை விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழாவில் கணவர் கவுதம் கிச்சலு கலந்து கொண்டு காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார்.

கணவர் உதவி இல்லாமல் இந்த தொழிலை என்னால் தொடங்கி இருக்க முடியாது என்று காஜல் அகர்வால் தெரிவித்து உள்ளார். தொழில் அதிபராக மாறிய காஜல் அகர்வாலுக்கு சக நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com