"ரெட்ட தல" படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
"ரெட்ட தல" படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ரெட்ட தல படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திலிருந்து சமீபத்தில் வெயின கண்ணம்மா என்ற பாடலை தனுஷ் பாடியிருந்தார். இந்தப் பாடல், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இப்படம் வரும் டிசம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ரெட்ட தல படக்குழு, இப்படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com