'நானே வருவேன்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்..!

நடிகர் தனுசின் பிறந்தநாளை முன்னிட்டு 'நானே வருவேன்' படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
'நானே வருவேன்' படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்..!
Published on

சென்னை,

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'நானே வருவேன்' படக்குழுவினர் நடிகர் தனுசுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் வில்லுடன் தனுஷ் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com