வசூலில் மாஸ் காட்டிய 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'... ‘டைட்டானிக்’ படத்தை பின்னுக்குத் தள்ளி 4வது இடம்

அதிக வசூல் குவித்த படங்களில் ’அவதார்’முதலிடத்திலும் ’அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம்’ 2ம் இடத்திலும் உள்ளன.
 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'
Published on

சென்னை,

டைட்டானிக் பட வசூலை முந்தி உலக அளவில் அதிக வசூல் செய்த 4வது படம் என்ற சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது.

ரூ.22,000 கோடி

டைட்டானிக் படத்தின் $2,26 பில்லியன் வசூலை முந்திய இப்படம் இதுவரை $2.3 பில்லியன் (ரூ.22,000 கோடி) வசூலித்துள்ளது. அதிக வசூல் குவித்த படங்களில் ’அவதார்’முதலிடத்திலும் ’அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம்’ 2ம் இடத்திலும் உள்ளன.

டாம் ஹாலண்ட்

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே'. கடந்த ஜூலை 31ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாதனை

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும் 'ஸ்பைடர்மேன்' திரைப்பட வரிசையில் நான்காவது படமாகவும் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது டைட்டானின் பட வசூலை முந்தி சாதனை படைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com