’ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' படப்பிடிப்பு நிறைவு


Spider-Man: Brand New Day Wraps Filming
x

'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' படத்தில் டாம் ஹாலண்ட் நடித்திருக்கிறார்.

வாஷிங்டன்,

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.

இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹோம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹோம் படமும், கடைசியாக 3-வது பாகமாக ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படமும் வெளியாகின. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து 4-வது பாகமான 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' உருவாகி வருகிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி வருகிறார். இந்நிலையில், நடிகர் டாம் ஹாலாண்ட் நடிக்கும் 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story