''அது இல்லை என்றால்...காணாமல் போய்விடுவோம்'' - ''ஸ்பிரிட்''பட நடிகை


Spirit actress Triptii Dimri makes a bold remark about outsiders in film industry
x
தினத்தந்தி 28 July 2025 1:03 PM IST (Updated: 28 July 2025 1:04 PM IST)
t-max-icont-min-icon

திரைத்துறையில் சினிமா பின்புலம் இல்லாதவர்களின் போராட்டங்கள் குறித்து திரிப்தி டிம்ரி பேசினார்

சென்னை,

தனது சினிமா கெரியரின் தொடக்கத்தில், புல்புல் போன்ற படங்களில் நடித்ததற்காக நடிகை திரிப்தி டிம்ரி பாராட்டப்பட்டபோதிலும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ரன்பீர் கபூர் நடித்த ''அனிமல்'' திரைப்படம் அவரை பிரபலப்படுத்தியது.

தற்போது அவர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ''ஸ்பிரிட்''-ல் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில், திரைத்துறையில் சினிமா பின்புலம் இல்லாதவர்களின் போராட்டங்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான கருத்தைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''சினிமா பின்புலம் இல்லாதவர்களாக இருந்தால் உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் கிடைக்காது. இன்று ஒரு படம் இருக்கிறது, நாளை இன்னொரு படம் இருக்கும். ஆனால் அதன் பிறகு, அடுத்த படத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

ஏனென்றால் இரண்டு படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெறவில்லை என்றால் காணாமல் போய்விடுவோம். அதுதான் உண்மை. எனவே, கதை மற்றும் உங்கள் கதாபாத்திரங்கள் மீது நீங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்''என்றார்.

திரிப்தி டிம்ரி அடுத்ததாக ''தடக் 2'' படத்தின் மூலம் திரையில் தோன்ற இருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளது.

1 More update

Next Story