'சிங்கிள்' பட நடிகரின் அடுத்த படம்...இயக்குனர் இவரா?


Sree Vishnu to team up with Aay director for a Geetha Arts production
x

'சிங்கிள்' படத்தில் இவானா, கெட்டிகா ஷர்மா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஸ்ரீ விஷ்ணு. இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'சிங்கிள்'.

இவானா, கெட்டிகா ஷர்மா கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படம் நான்கு நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில், நடிகர் ஸ்ரீ விஷ்ணு அடுத்ததாக 'ஆய்' இயக்குனர் கே. அஞ்சியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'சிங்கிள்' படத்தை தயாரித்த கீதா ஆர்ட்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நர்னே நிதின் மற்றும் நயன் சரிகா ஆகியோர் நடித்த 'ஆய்' திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story