இன்ஸ்டா ரீல்ஸில் ரசிகர்களை ஈர்க்கும் ஸ்ரீலீலா


Sreeleela captivates fans with Insta Reels
x

ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. தற்போது இவர் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதேபோல், தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

தெலுங்கில் ரவி தேஜாவுடன் 'மாஸ் ஜாதரா' மற்றும் அகினேனி அகிலுடன் 'லெனின்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு ஒரே நேரத்தில் பல மொழி படங்களில் நடித்து வருவதால் பான் இந்தியா அளவில், 'சென்சேஷனல்' நடிகையாக ஸ்ரீலீலா மாறி இருக்கிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு ரீல்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், ஸ்ரீலாவை நடிக்க வைத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை ரீல்ஸாக 'மரியான்' பட பாடலை வைத்து இன்ஸ்டாகிராமில் ஸ்ரீலீலா பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை பறக்கவிட்டு இருக்கிறார்கள்.

1 More update

Next Story