‘புஷ்பா 2’-க்கு 'ஓகே'...பிற படங்களுக்கு 'நோ' சொல்லும் ஸ்ரீலீலா

தற்போது ஸ்ரீலீலா ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சென்னை,
சிறப்பு பாடல்களில் ஆடுவது தனக்கு பிடித்த விஷயம் அல்ல என நடிகை ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். இருப்பினும், ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்திற்காக மட்டும் அந்த கனமான முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இதனை அவர் கூறினார்.
அவர் பேசுகையில், “நான் நடிக்கும் படங்களில் மட்டுமே நடனமாட விரும்புகிறேன். பிற நடிகர்களின் படங்களில் சிறப்பு பாடல்களில் ஆட விருப்பமில்லை. இருப்பினும் ‘புஷ்பா 2’ படத்தில் நடனமாடியது சரியான முடிவாகவே பார்க்கிறேன். அதன் மூலம் எனக்கு பெரிய ரீச் கிடைத்தது” என்றார்.
சமீப காலமாக ஸ்ரீலீலாவுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அவர், தற்போது ‘பராசக்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படம், வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






