ஸ்ரீ கவுரி பிரியாவின் “சென்னை லவ் ஸ்டோரி” படத்தின் டிரெய்லர் வெளியானது

சாய் ராஜேஷ் இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ஸ்ரீ கவுரி பிரியா நடித்த ‘சென்னை லவ் ஸ்டோரி’ படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது.
ஸ்ரீ கவுரி பிரியாவின் “சென்னை லவ் ஸ்டோரி” படத்தின் டிரெய்லர் வெளியானது
Published on

சாய் ராஜேஷ் இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ஸ்ரீ கவுரி பிரியா நடித்த ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

சென்னை லவ் ஸ்டோரி

‘பேபி’ படத்தின் வெற்றிக்கு பிறகு, எழுத்தாளரும் இயக்குனருமான சாய் ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ்கேஎன் ஆகியோர் மீண்டும் காதல் திரைப்படமான ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர்.

சாய் ராஜேஷ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளதுடன் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் உள்ளார். ரவி நம்பூரி இயக்கியுள்ள இந்த படம் வருகிற 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘சென்னை லவ் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ‘லவ்வர்’ பட நடிகை ஸ்ரீ கவுரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கிரண் அப்பாவரம் கதாநாயகனாக நடிக்கிறார்.

நடிகை மாற்றம்

இதற்கிடையில், முதலில் இந்த படத்தில் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஜோடியாக நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் திட்டம் தாமதமானதை தொடர்ந்து, இறுதியில் கிரண் அப்பாவரம் மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சாய் ராஜேஷ் இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ஸ்ரீ கவுரி பிரியா நடித்த ‘சென்னை லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படம் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com