

இந்தப் படத்தில் வெண்பா, அனுகிருஷ்ணா, தீக்ஷிகா ஆகிய மூன்று பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 'காதல்' சுகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன், பூவிலங்கு மோகன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சக்தி அருண் கேசவன் தயாரிக்க, ஈசன் டைரக்டு செய்து இருக்கிறார்.
"வறுமையில் வாடும் ஒருவர், பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால் அவர் மட்டும் இன்றி, அவரைச் சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்ற கருத்தை, காதல், நகைச்சுவை, குடும்ப பாசம் கலந்து திரைக்கதையாக அமைத்து இருக்கிறோம்" என்று கூறுகிறார், டைரக்டர் ஈசன்.